அப்பக் குடத்தானை தரிசித்தால்இல்லத்தில் சுபிட்சம் நிலவும்!

By வி. ராம்ஜி

தன் பக்தனிடம்... சாப்பிட அப்பம் கேட்ட பெருமாள் என்பதால் , அந்த பக்தர், குடம் முழுக்க அப்பம் எடுத்து வந்து கொடுத்தார். இதனால் பெருமாளுக்கு அப்பக்குடத்தான் என்று திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது தல புராணம்.

எனவே அப்பம் நைவேத்தியம் செய்து இந்த ஆலயத்தின் வழக்கமாகவே ஆகிவிட்டது என்கிறார்கள் பக்தர்கள்.

திருச்சியில் இருந்து கல்லணை வழியாக, திருவையாறு செல்லும் வழியில் அமைந்துள்ளது அப்பக்குடத்தான் பெருமாள் கோயில். இங்கே, பெருமாளின் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்தணரிடம், ‘எனக்கு அப்பம் கொடுக்கிறாயா. பசிக்கிறது’ என்று அசரீரியாக கேட்டாராம். பெருமாள் .

அதையடுத்து குடம் முழுவதும் அப்பம் எடுத்து வந்து, பெருமாளுக்கு வழங்கி நெகிழ்ந்து போனாராம் அந்தணர். அப்போது, அவருக்கு தன் ரூபத்தைக் காட்டி அருளினார் திருமால். அன்று முதல், இந்தப் பெருமாளுக்கு அப்பால ரங்கநாதப் பெருமாள் என்றும் அப்பக்குடத்தான் என்றும் திருநாமங்கள் அமைந்தன என்று தெரிவிக்கிறது ஸ்தல புராணம்!

சோழர்கள் காலத்து ஆலயம். மன்னர்கள் பலர் ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். கோயிலுக்கு பல நிவந்தங்கள் எழுதி வைத்துள்ளனர். ஜிலுஜிலுவென காற்று தவழ, அமைதியே உருவெனக் கொண்டு திகழ்கிறது திருக்கோயில்.

சாந்நித்தியமான இந்தக் கோயிலில், இன்றைக்கும் பெருமாளுக்கு அப்பமே நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு வருகிறது. அதையே பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகின்றனர்.

பெருமாளின் விருப்பத்துக்குரிய பிரசாதமான அப்பத்தை நைவேத்தியமாகச் சாப்பிட்டால், தீராத நோயும் தீரும், இல்லத்தில் மகாலக்ஷ்மி குடிகொள்வாள், சுபிட்சம் நிலவும் என்கின்றனர் பக்தர்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்