ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது சிதம்பரம் தீர்த்தக்குளம்

By வி. ராம்ஜி

கோயில் என்றால் வைஷ்ணவத்தில் ஸ்ரீரங்கம் கோயிலைச் சொல்வார்கள். அதேபோல், சைவத்தில் கோயில் என்றால் தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தைச் சொல்வார்கள்.

மிகப் பிரமாண்ட ஆலயம் இது. பூமிக்கு இறைவன் சிவபெருமான் வந்தபோது, அவருடன் மூவாயிரம் அந்தணர்களை அழைத்து வந்ததாகச் சொல்கிறது புராணம். இவர்கள் தில்லை மூவாயிரத்தார் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களை தீட்சிதர்கள் என்று அழைக்கின்றனர்.

இத்தனை பெருமைமிகு சிதம்பரம் நடராஜர் கோயிலில், சிவகங்கை தீர்த்தக் குளம் உள்ளது. வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும் குளம்தான் என்றாலும் இப்போது பெய்து வரும் மழையால், சிவகங்கைத் தீர்த்தக்குளம் நிரம்பியுள்ளது என்கிறார் இந்தக் கோயிலின் வெங்கடேச தீட்சிதர்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு, கடலூர் மாவட்டம் சிதம்பரம் முதலான பகுதிகளில் பெருமழை பெய்தது. அப்போது சிதம்பரம் நடராஜர் கோயிலின் சிவகங்கை தீர்த்தக்குளம் நிரம்பி வழிந்தது. இப்போது கடந்த நான்கைந்து நாட்களாக பெருமழை பெய்து வருகிறது.

இதையொட்டி, சிவகங்கை புண்ணிய தீர்த்தக் குளம் நிரம்பியுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து, மிகப்பெரிய இந்தத் தீர்த்தக் குளம் நிரம்பியிருக்கிறது என்கிறார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்