கார்த்திகை சஷ்டியில் அழகன் முருகனை கண்ணாரத் தரிசனம் செய்தால், சகல யோகங்களும் பெற்று இனிதே வாழலாம். இன்னொரு விஷயம்... ஐப்பசி சஷ்டியை, கந்த சஷ்டி என்று போற்றுகிறோம். கொண்டாடுகிறோம். விரதம் இருக்கிறோம்தானே! கிட்டத்தட்ட கந்தசஷ்டியில் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலனை, கார்த்திகை சஷ்டியும் தந்தருளும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
மாதந்தோறும் வருகிற சஷ்டியே விசேஷம். அதிலும் குறிப்பாக, கந்தசஷ்டி வரும் ஐப்பசியும் கார்த்திகேயனுக்கு உரிய கார்த்திகை மாதத்தின் சஷ்டியும் ரொம்பவே சிறப்பு. எனவே இந்த சஷ்டி நன்னாளில், விரதம் மேற்கொள்ளுங்கள். இயலாதவர்கள், ஏதேனும் மிதமான உணவு உட்கொண்டோ, ஜூஸ், பால் முதலான திரவங்களை உட்கொண்டோ விரதம் இருக்கலாம். இந்த நாளில், விரதமிருந்து, மாலை வேளையில் அருகில் உள்ள சிவாலயங்களில் உள்ள முருகப்பெருமானின் சந்நிதிக்கோ முருகன் கோயிலுக்கோ சென்று வழிபடுங்கள்.
செவ்வரளி மாலை சார்த்தி வணங்குங்கள். எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுவது இன்னும் வளமும் நலமும் தரும். இயலாதோருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். வீடு, மனை முதலான சிக்கல்கள் இருப்பின் அவற்றில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
எனவே சஷ்டி விரதம் இருந்தால், கந்தசஷ்டியில் விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ... புண்ணியங்கள் பெறுவோமோ... அவை அனைத்தையும் பெறலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
வருகிற வெள்ளிக்கிழமை 24ம் தேதி சஷ்டி. சுக்கிர வாரத்தில் சஷ்டியும் இணைந்து வர வேலவனை விரதமிருந்து வழிபடுங்கள். சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்து, சந்தோஷம் பெருகச் செய்வான்; சத்தான வாழ்வைத் தருவான் சக்தி வடிவேலவன்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago