ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோயில் நடை இன்று பகல் முழுவதும் திறப்பு

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நடை இன்று பகல் முழுவதும் திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது ஆடி திருக்கல்யாண திருவிழா. இந்த ஆண்டுக்கான விழா ஜூலை 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று ஆடி அமாவாசையைமுன்னிட்டு ராமநாத சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். காலை 9 மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருள்வார்.

தொடர்ந்து காலை 10.30 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ராமர், சீதா மற்றும் லட்சுமணர் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும் பகல் முழுவதும் நடை திறந்திருக்கும். அக்னி தீர்த்தக் கடற்கரையில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

விழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியாக ஜூலை 21-ம் தேதி தேரோட்டம், 23-ல் ஆடிதபசு, 24 -ல் திருக்கல்யாணம், ஜூவை 29-ம் தேதி கெந்தனமாதன பர்வதம் மண்டபகப்படிக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE