துக்கமெல்லாம் போக்கும் அனுமன் சாலீசா!

By வி. ராம்ஜி

சதாசர்வகாலமும் ராமபிரானையே வணங்கும் ராமபக்தன், அனுமன் பராக்கிரமம் நிறைந்தவர். நம் பாவங்களையெல்லாம் போக்கி அருள்பவர்.

அசாத்திய சாதகனான ஆஞ்சநேயரை வழிபடுவோருக்குப் புத்தி, பலம், மனோ தைரியம், ஆரோக்கியம், புகழ், கெளரவம், நற்குணங்கள், வாக்குவன்மை ஆகியவற்றைத் தந்தருள்வார் அனுமன் என்கிறார்கள் பக்தர்கள்!

ஸ்ரீராம தூதனாம் மாருதியைப் போற்றுகிற ஸ்தோத்திரங்கள் பல உண்டு. அவற்றுள் சக்தி மிக்கது ஹனுமான் சாலீசா.சிறந்த ராமபக்தரும், ராம சரித மானஸ் என்ற தலைப்பில் ராமாயணத்தை அவதி மொழியில் (இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் பேசப்படும் ஒரு மொழி இது பெரும்பாலும் இந்தி மொழியை ஒத்திருந்தாலும் தனி மொழி அந்தஸ்து பெறும் அளவிற்குத் தனித்துவம் வாய்ந்தது) இயற்றியவருமான துளசிதாஸரால் இயற்றப்பட்டது!

ஹனுமான் சாலீசா தோன்றிய கதையைப் பார்ப்போமா?

மகான் துளசிதாஸர் அந்தக் காலத்தில் டில்லியை ஆட்சி செய்த மொகலாய மன்னரிடம் ராமபிரானின் பெருமைகளையும் ராம தரிசனத்தின் ஆனந்தத்தையும் மனம் நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் கூறினார். இதைக் கேட்ட மன்னர், தனக்கும் ராம தரிசனம் செய்து வைக்குமாறு வேண்டினார்.

ராம தரிசனம் என்பது பரிட்சை செய்து பார்க்கும் விஷயமல்ல, உண்மையான பக்தியுடன் வேண்டினால் மட்டுமே கிடைக்கக் கூடியது என்று துளசிதாஸர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் செவிசாய்க்காத அந்த மன்னர் துளசிதாஸரைச் சிறையிலிட்டார்.

ஆனால் துளசிதாஸர் மனங்கலங்கவில்லை. அனுமனைப் பிரார்த்தித்து ஹனுமன் சாலீசா என்ற ஸ்தோத்திரத்தை இயற்றினார். அனுமனின் அருளால் டில்லி நகரம் முழுவதுமாக அணி அணியாய்த் திரண்ட குரங்குகளால் சூழப்பட்டது.

குரங்குகளின் அட்டகாசத்தைத் தவிர்க்க முயன்ற அரசின் முயற்சிகளும் மக்களின் முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்தன. மன்னர் துளசிதாஸரை சந்தித்து, குரங்குகளின் தொந்தரவு குறித்துக் கூறினார். மேலும் துளசிதாஸரை சிறையில் பிடித்து வைத்துக் கொண்டார்.

துளசிதாஸர் சிரித்தார். “அது ராமனது வானரப்படையின் மிகச்சிறிய ஒரு பகுதி. மொத்தப் படையும் வந்தவுடன் ராமனும் வந்துவிடுவார், தங்களுக்குத் தரிசனம் அளிப்பார்” என்றார். தன் தவறை உணர்ந்து மன்னர் துளசிதாஸரை விடுவித்து மன்னிப்பு வேண்ட, அனுமன் அருளால் வானரப்படை மறைந்தது.

ஹனுமன் சாலீசா 40 நாலடிப் பாக்களால் அமைந்தது. சாலீசா என்பதற்கு இதுவே காரணம் என்பார்கள். மேலும் தோஹா எனும் ஈரடிப் பாக்கள் இரண்டு முதலில் இடம்பெறுகின்றன. இவை குருநாதரையும் ஆஞ்சநேயரையும் போற்றி வணங்குகின்ற்அன. ராமபக்தி சம்பிரதாயத்தில் ஆஞ்சநேயர், குருவுக்கு நிகரானவர், குருவானவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

பிறகு, நாற்பது பாக்கள் அனுமனின் திவ்ய ரூபம், வெல்ல முடியாத பலம், புத்தி சாதுரியம், தைரியம், ராமபிரானுக்கு அவர் செய்த அரிய சேவைகள், சஞ்ஜீவி மலை கொண்டு வந்தது, அனுமனை வழிபடுவதால் அடையும் நன்மைகள் ஆகியவற்றை மிக அழகாகவும் ஆழமாகவும் சிலிர்ப்புடனும் திகைப்புடனும் விவரித்த விதம், நம்மை இன்னும் பக்திக்குள் ஆழ்த்தும் என்கிறார்கள் அனுமன் பக்தர்கள்!

இந்த ’அனுமன் சாலீசா’ ஸ்தோத்திர பாராயணம் தீயசக்திகளை விரட்டும் சக்தி கொண்டது என்பது, அதைப் படித்துப் பயன்பெற்றவர்கள் உணர்ந்து பூரித்திருப்பார்கள்.

துக்கமும் கலக்கமும் மனதைச் சூழ்ந்திருக்கும் தருணங்களில், ராம பக்தனின் அனுமன் சாலீசாவை, மனதை ஒருமைப்படுத்தி பாராயணம் செய்வோம். உணர்ந்து பாராயணம் செய்து வணங்குவோம். ஆயுளும் நீடிக்கும். ஆரோக்கியமும் பெருகும். மனோபலத்துடன் மகிழ்ச்சியுடன் இனிதே வாழ்வோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்