சென்னை: மன்னார்குடி ஸ்ரீ அண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத் சபாவின் 76-வது வார்ஷிக த்ரிமதஸ்த வித்வத் சதஸ் ஜூலை 14,15,16-ம் தேதிகளில் மன்னார்குடியில் நடைபெற உள்ளது.
காஞ்சி காமகோடி பீடத்தின்68-வது மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் மன்னார்குடி உ.வே. ஏ.ஸ்ரீ நிவாஸய்யங்கார் சுவாமியால் 1944-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீ அண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத் சபாவின் 76-வது வார்ஷிக த்ரிமதஸ்த வித்வத் சதஸ், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி சந்நிதி தெருவில் (ஸ்ரீநிவாச நிலையம் - வானமாமலை மடம் கீழ்புறம்) வரும் 14-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு (ஆனி மாதம் 29 முதல் 31-ம் தேதி வரை)நடைபெற உள்ளது. இந்த ஆண்டு வித்வத் சபை ஸ்ரீ உ.வே. வித்வான்வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் சஷ்டி அப்த பூர்த்தி உற்சவமாக நடைபெறுகிறது.
கல்வி உதவித் தொகை: இந்த ஆண்டுமுதல், ஸ்ரீ அகோபில மடத்தின் ஜீயர் சுவாமி ஆக்ஞையுடன் ரிக் வேதத்தில் வாய்மொழித் தேர்வு நடத்தப்படும். இதுதொடர்பாக ரிக் வேத பரிக்ஷாதிகாரி (தேர்வு அதிகாரி)ஜீயர் சுவாமிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தொடக்கம் முதலே இந்தச் சபை அனைத்து யதிகள் மற்றும் வேத பண்டிதர்களால் ஆதரிக்கப்பட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் தேர்வுகளில் வெற்றி பெற்று, தகுதிச் சான்றிதழ்களைப் பெறும்வித்யார்த்திகள், அவர்கள் இல்லத்துக்கு அருகில் உள்ள கோயில்களில் அவர்கள் நிகழ்த்தும் தினசரி பாராயணத்துக்கு ஏற்ப திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து மாதாந்திர கல்வி உதவித் தொகை பெறும் வாய்ப்பு உள்ளது.
சிறப்பு உபன்யாசங்கள்: தினமும் காலை 10-00 மணிமுதல் 12-00 மணி வரையிலும்,மாலை 3-00 மணி முதல் 4-30 வரையிலும் மதத்ரய வேதாந்தங்களில் வாக்யார்த்தங்களும், ஸ்ரீகிருஷ்ண யஜூர் வேத, சாமவேதம், ரிக் வேதம், திவ்யப்பிரபந்தம், ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமசாஸ்திரங்களில் தேர்வுகளும், மாலை 4-30 மணி முதல் பிரபல வித்வான்களின் உபன்யாசங்களும் நடைபெறும். நிறைய எண்ணிக்கையில் வித்யார்த்திகள் வந்துதேர்வுகளில் பங்குபெற வேண்டும்.
» உயர் அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் - கோவையில் கூடுதல் டிஜிபி தலைமையில் ஆலோசனை
ஜூலை 14-ம் தேதி ஸ்ரீ செங்கமலத் தாயார் திருஆடிப்பூர உத்ஸவத்தின் முதல் நாளை முன்னிட்டு மாலை 4-15 மணிக்கு ‘இருள் நீக்கும் வித்யை’ என்ற தலைப்பில் ஸ்ரீ உ.வே. வித்வான் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியும், அவரைத் தொடர்ந்து ‘ஸ்ரீவித்யையும் ராஜகோபாலனும்’ என்ற தலைப்பில் ஸ்ரீ உ.வே. வித்வான் டாக்டர் வெங்கடேஷ் சுவாமியும் உபன்யாசம் நிகழ்த்த உள்ளனர்.
ஜூலை 15-ம் தேதி அன்ன வாகனநிகழ்வை முன்னிட்டு மாலை 4-15 மணிக்கு ‘வேத மகிமை’ என்ற தலைப்பில் பிரம்மஸ்ரீ நீலகண்ட சாஸ்திரிகள் சுவாமியும், அவரைத் தொடர்ந்து ‘ராமானுஜனும் ராமானுஜரும்’ என்ற தலைப்பில் ஸ்ரீஉ.வே.வித்வான் முனைவர் அனந்தபத்மநாபா சாரியார் சுவாமியும் உபன்யாசம் நிகழ்த்த உள்ளனர்.
ஜூலை 16-ம் தேதி சேஷ வாகன நிகழ்வை முன்னிட்டு, மாலை 4-15 மணிக்கு ‘நித்ய கர்மா’ என்ற தலைப்பில் மத்வஸ்ரீ வித்வான் ஸ்ரீ ப்ராஹ்மண்ய நாராஜாச்சார் குமாரர் ஸு ப்ராஹ்மண்ய ரகுநாதாச்சார் சுவாமியும், ‘ஸ்ரீ பாஞ்சராத்ரத்தில் சாந்தி கர்மாக்கள்’ என்ற தலைப்பில் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமவித்வான் ஸ்ரீ உ.வே.டாக்டர் ராஜேஸ்குமார் சுவாமியும் உபன்யாசம் நிகழ்த்த உள்ளனர். இந்நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஸம்பாவனை சதஸ் பஞ்ச சாந்தி - வந்தனோபசாரம் நிகழ்வுடன் 76-வது வார்ஷிக த்ரிமதஸ்த வித்வத் சதஸ் நிறைவு பெறுகிறது.
இந்நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்களைப் பெற 9840099833 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
47 mins ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago