சாக்கோட்டை வீரசேகரர் உமையாம்பிகை கோயில் ஆனித் தேரோட்டத்தில் பெண்கள் வழிபாடு

By இ.ஜெகநாதன்


காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டையில் வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் தேரோட்டம் நடைபெற்றது. பெண்கள் குலவையிட்டு, பாட்டுப் பாடி வழிபட்டனர்.

பிரசித்தி பெற்ற பழமையான இக்கோயில் ஆனித்திருவிழா ஜூன் 27-ம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஜூலை 1-ம் தேதி தபசு காட்சியில் 63 நாயன்மார்கள் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்தனர். தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி காலையில் 2 பெரிய தேர்களில் பிரியாவிடையுடன் வீரசேகரரும், உமையாம்பிகையும் தனித்தனியாக எழுந்தருளினர். சிறிய தேர்களில் விநயாகர், சண்டிகேஸ்வரர், முருகன் ஆகியோர் எழுந்தளினர். மாலை 4.35 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெண்கள் குலவையிட்டும், பாட்டு பாடியும் வழிப்பட்டனர்.


சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் வீரசேகர், உமையாம்பிகை.

தேர் மாலை 5.25 மணிக்கு நிலையை அடைந்தது. நாளை காலை தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதில் சாக்கோட்டை, புதுவயல், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE