உலக நலன் வேண்டி பழநி கோயிலில் 108 சங்காபிஷேகம், அன்னாபிஷேகம்

By ஆ.நல்லசிவன்

பழநி: உலக நலன் வேண்டி பழநி முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம், அன்னாபிஷேகம் இன்று (ஜூலை 2) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உலக நலன் வேண்டி நேற்று பாரவேல் மண்டபத்தில் 108 வலம்புரி சங்குகளில் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு, தங்க சப்பரத்தில் 3 கலசங்களில் புனித நீர் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. தலைமை குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்ரமணியம் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி நடைபெற்றது.

இதையடுத்து, சப்பரத்தில் உள்ள கலசங்களுக்கு தீபாராதனை செய்யப்பட்டு, கலசங்கள் மற்றும் 108 சங்குகள் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தது. பின் உச்சிகால பூஜையின் போது மூலவருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேரன், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல், திங்கள்கிழமை (ஜூலை 3) மாலை திருஆவினன்குடி கோயிலிலும், செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) மாலை பெரியநாயகியம்மன் கோயிலும், ஜூலை 5-ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. வார விடுமுறை நாளான நேற்று வெளியூர் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. மலைக்கோயிலில் இரண்டு மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்