ஒரே இடத்தில் இரு அம்மன்களின் தரிசனமும், அருளும் கிடைக்கும் திருத்தலம் முத்தியால்பேட்டை முத்தாலம்மன் கோயில். நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமளிக்கும் இந்த இரு அம்மன்களின் அருளைப் பெற காஞ்சிபுரம் மாவட்டத்தைத் தாண்டியும் பக்தர்கள் பலர் வந்தவண்ணம் உள்ளனர்.
அன்னை ஆதிபராசக்தி மக்களுக்கு அருள்புரிவதற்காக பல்வேறு வடிவங்களில் கோயில் கொண்டுள்ளார். இதில் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நத்தப்பேட்டை, முத்தியால்பேட்டையில் உள்ள கோயில் தனிச் சிறப்பு பெற்றது.
இந்தக் கோயிலில் மூலவர் முத்தாலம்மன். இந்த மூலவருக்கு இணையாக அதன் பக்கத்திலேயே மற்றொரு சன்னிதியில் வீற்றிருக்கிறார் முத்துமாரியம்மன்.
புதர் மண்டிய இடத்தில் ஓரு சிறிய கற்கோயிலாகத்தான் பல ஆண்டுகளாக இருந்தது. இது ஒரு கிராமியக் கோயில். காஞ்சிபுரத்தில் கவரைத் தெரு போன்ற இடங்களில் வசித்து முத்து வளையல் வியாபாரம் செய்து வந்த ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் இக்கோயிலில் உள்ள அம்மனைக் குல தெய்வமாக வழிபாடு செய்துள்ளனர்.
பவுர்ணமி சிறப்பு அபிஷேகம்
இதன்படி 1996-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு 1999-ல் கோயில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டில் ஒரு குடமுழுக்கு விழா நடைபெற்றது. தற்போது ஆலயம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் ஆலயத்துக்கு முன் பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலில் மகா சண்டி ஹோமம், துர்கா லக்ஷ்மி சரஸ்வதி ஹோமம் ஆகிய ஹோமங்களும், துர்கா சப்த சதி, பால்குட ஊர்வலம், ஆடிமாத கூழ் வார்த்தல் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகின்றன.
ஓங்காரநந்தா, வாழும் கலை ரவிசங்கர், ரத்தினகிரி சுவாமிகள், வேலூர் நாராயணி மடத்தைச் சேர்ந்த சுவாமிகள் உள்பட பல்வேறு ஆன்மிகப் பெரியவர்களும் வந்து சென்றுள்ளனர் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்தக் கோயிலுக்கு பலதரப்பட்ட மக்களும் அம்மனின் அருள் வேண்டி வருகின்றனர். இந்தக் கோயிலில் காலை, மாலை என தினம்தோறும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பவுர்ணமியின்போது சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். இந்தக் கோயிலுக்கு வந்து இரண்டு அம்மன்களைத் தரிசனம் செய்தால் திருமணம், வழக்கு, தொழிலில் வெற்றி கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
எப்படி வரலாம்?
காஞ்சிபுரம் வந்து அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்தியால்பேட்டை என்ற இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் உள்சாலையில் சென்று கோயிலை அடையலாம். தாம்பரம் போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் வாலாஜாபாத் வந்து அங்கிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் முத்தியால்பேட்டையில் இறங்கி கோயிலை அடையலாம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago