பழநி: முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என அரசு அறிவித்திருந்தும், பழநி முருகன் கோயிலில் பக்தர்களிடம் கட்டாய வசூலிலில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவிழா காலங்களில் ஒரு நாளில் சராசரியாக 20 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர்.
முடி காணிக்கை இலவசம்: பழநி தேவஸ்தானம் சார்பில் திருஆவினன்குடி கோயில் அருகில், சண்முகநதி, வின்ச் நிலையம் அருகில், தண்டபாணி நிலைய வளாகம் உட்பட 7 இடங்களில் முடி காணிக்கை செலுத்தும் இடங்கள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்டோர் முடி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழநியில் முடி காணிக்கைக்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஊழியர்களுக்கும் பணம் வழங்க தேவை இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, பழநியில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. அதை காண்பித்து பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தலாம். ஆனால் அதை மீறி முடி இறக்கும் தொழிலாளர்கள், பக்தர்களிடம் அடாவடியாக பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட சென்னையைச் சேர்ந்த மனோகரன் கூறியதாவது: கடந்த வாரம் குடும்பத்துடன் பழநி கோயிலுக்கு வந்தோம். முடி காணிக்கை செலுத்த பணம் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் முடி காணிக்கை செலுத்திய பிறகு பக்தர்கள் தாங்களாக கொடுக்கும் பணத்தை முடி இறக்கும் தொழிலாளர்கள் வாங்குவதில்லை. மாறாக, இவ்வளவு கொடுங்கள் என்று கேட்டு பக்தர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். இதைக் கண்காணித்து கோயில் நிர்வாகம் தடுக்க வேண்டும், என்றார்.
புகார் எண்கள்: இது குறித்து பழநி கோயில் அதிகாரிகள் கூறுகையில், தேவஸ்தானம் சார்பில் முடி இறக்கும் தொழிலாளர்களுக்கு மாதந் தோறும் ஊக்கத்தொகையாக ரூ.5,000 மற்றும் மொட்டையை கணக்கிட்டு பங்குத் தொகையும் வழங்கப்படுகிறது. பக்தர்களிடம் பணம் வசூலிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே முடி காணிக்கை செலுத்துவதற்கு பணம் கேட்டால்,பக்தர்கள் கோயில் அலுவலகம் அல்லது 9489668096, 9489668082 ஆகிய எண்களில் புகார் செய்யலாம், எனத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago