வெள்ளிப் பல்லக்கில் சென்று குருமூர்த்தங்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு: இன்று இரவு பட்டினப் பிரவேசம்

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆதீன குருமுதல்வர் ஞானசம்பந்தர் குருபூஜைப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது

நடப்பாண்டு விழா மே 31-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம், தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று காலை காவிரி ஆற்றில் ஞானபுரீஸ்வரர் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. பூஜை மடத்தில் சொக்கநாதப் பெருமானை வழிபாடு செய்த பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தங்க பாதணி அணிந்து, வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி, தம்பிரான் சுவாமிகள், பக்தர்கள் சூழ திருமடத்திலிருந்து புறப்பட்டு, ஆனந்த பரவசர் பூங்காவில் உள்ள குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, வன துர்க்கை கோயிலில் வழிபட்டார்.

பின்னர் ஆதீனகர்த்தர் முன்னிலையில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள், ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது. இதில், மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீன திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், கட்டளை தம்பிரான் சுவாமிகள், ஆதீன பொதுமேலாளர் கோதண்டராமன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்வான, தருமபுரம் ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 10) இரவு நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்