கும்பகோணம் | நாதன்கோயில் ஜகந்நாதபெருமாள் கோயிலில் கொடியேற்றம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி நாதன்கோயில் ஜகந்நாதபெருமாள் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

கும்பகோணம் வட்டம், நாதன்கோயிலிலுள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

108 வைணவ தலங்களில் ஒன்றாக திகழும் இக்கோயிலில் ஆண்டுதோறும் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு 1-ம் தேதி பகவத் பிரார்த்தனை,அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடைபெற்றது.

காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு 16 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அங்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜகந்நாதப்பெருமாள் சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தார்.

தொடர்ந்து வரும் 11-ம் தேதி வரை தாயார்-பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. பிரதான விழாவான வரும் 8-ம் தேதி திருக்கல்யாணமும், 10-ம் தேதி திருத்தேரோட்டமும், நந்தி புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE