”ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல்” - வைரலாகும் அஸ்வின் - சஞ்சு சாம்சன் - ஹெட்மயர் வீடியோ

By செய்திப்பிரிவு

ஜெய்பூர்: ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். இந்த நிலையில் தனது அணியின் பயண வீடியோக்களை அவர் தனது யூ- டியூப் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்து வருகிறார். மேலும் கிரிக்கெட் நிபுணர்களுடன் ஐபில் போட்டிகள் குறித்து நேர்காணலும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் - அஸ்வின் - அந்த அணியின் உடற்பயிற்சி நிபுணர் ராஜாமணி ஆகியோர் அவ்வப்போது போட்டிகள் முடிந்தபிறகு தமிழில் பேசும் வீடியோக்களையும் அவர் தனது யூ - டியூப் பக்கத்தில் பதிவு செய்கிறார்.

'ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல்' என்ற தலைப்பில் அவர்கள் பேசும் வீடியோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மூவரும் தமிழில் உரையாடுவதால் ரசிகர்களும் இந்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்திய வீடியோவில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயரும் இடம்பெற்றிருந்தது கூடுதல் சிறப்பாகி இருக்கிறது.

இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ”ராஜஸ்தான் அணிதான் தமிழ் அணி போல் உள்ளது” என்றும், ”தோனி ஓய்வுக்குப்பிறகு ராஜஸ்தானுக்குதான் தங்கள் ஆதரவு” என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

மேலும்