நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக 'வலிமை' அப்டேட் கிடைக்கும் தம்பி: வானதியின் நகைச்சுவை ட்வீட்

By செய்திப்பிரிவு

தான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக நடிகர் அஜித்தின் 'வலிமை' பட அப்டேட் கிடைக்கும் என, ட்வீட் ஒன்றுக்கு கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், 17 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை, மத்திய அமைச்சரும் தமிழகத் தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் நேற்று (மார்ச் 14) டெல்லியில் வெளியிட்டனர்.

அதன்படி, கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். பிரதானமாக, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுடன் வானதி சீனிவாசன் மோதுகிறார்.

இந்நிலையில், ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வரும் வானதி சீனிவாசனிடம், 'வலிமை அப்டேட் எப்ப?' என ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, "நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக 'வலிமை' பட அப்டேட் கிடைக்கும் தம்பி" என பதிலளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமூக வலைதளம்

1 year ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

மேலும்