பாகனுடன் பேசும் யானை; ஸ்ரீரங்கம் கோயிலில் அதிசயம்: வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் கோயில் யானை, தனது பாகனுடன் ஒலியெழுப்பிக் கொண்டே பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான யானை ஆண்டாள். 36 வருடங்களாக ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயிலிலேயே வாழ்ந்து வருகிறது. ராஜேஷ் என்பவர் யானையைக் கவனித்து வருகிறார். பாகன் ராஜேஷ் கேள்வி கேட்டால் அதற்கு ஆண்டாள் யானை பதில் சொல்கிறது.

சாலையில் நடந்து செல்லும்போது, 'சீக்கிரம் போய்விட்டு வந்து விடலாம்!' என்று பாகன் சொன்னதும் ஒலி மூலமாகவே 'சரி!' என்று சொல்கிறது ஆண்டாள். கையைக் கட்டச் சொன்னவுடன் தும்பிக்கையை மடித்துக் கொள்கிறது.

கால் சலங்கைகள் ஆட, கழுத்து மணிகள் குலுங்க தனது பாகனிடம் ஒலியெழுப்பியவாறே ஆண்டாள் பேசும் காட்சிகள் காண்போரை வியக்க வைக்கின்றன. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமூக வலைதளம்

1 year ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

மேலும்