கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதையொட்டி நாடு முழுவதும் காவலர்கள் ஓய்வறியாமல் சமூக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் விட்டிற்கு வெளியே ஓரமாக அமர்ந்து உணவு உண்ணும் காவலரை, அவரது மகள் வீட்டின் உள்ளே இருந்து புன்னகையுடன் எட்டிப் பார்க்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கரோனா தொற்றால் உலக நாடுகள் இதுவரை காணாத நெருக்கடி நிலையை சந்தித்துள்ளன. சுமார் 190 நாடுகளில் கரோனா வைரஸ் தன் கோர முகத்தைக் காட்டியுள்ளது .
சுமார் 1,202,715 பேர் உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,734 மக்கள் பலியாகியுள்ளனர்.
இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் கரோனா வைரஸ் தொற்றின் தீவிர தன்மையை புரிந்து கொள்ளாத மக்கள் பலர் விதிகளிலும் ,பொது இடங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.
அதனை தடுக்கும் வகையிலும், மக்களுக்கு போதிய விழிப்புணர்வை அளிக்கும் வகையிலும் இந்திய காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளிலும், விழிப்புணர்வு பிராச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கும் காவல் துறையினர் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளாமலும், தூக்கத்தை இழந்தும் மக்களுக்கு தங்கள் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
காவல் துறையின் இத்தகைய தியாகத்தை விளக்கும் புகைப்படங்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் அயோத்தியாவை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரியான ஆஷிஷ் தீவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் போலீஸார் ஒருவர் வீட்டின் வெளியே ஓரமாக அமர்ந்து உணவு சாப்பிட்டு
கொண்டு இருக்கும்போது அவரது மகள் வீட்டின் உள்ளே இருந்து புன்னகையுடன் எட்டிப் பார்க்கிறார்.
இந்தப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சுமார் 1 லட்சத்துக்கு அதிகமானவர்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்து இருக்கிறார்கள். 20,000க்கு அதிகமானவர்கள் ஷேர் செய்துகிறார்கள். மேலும் நெட்டிசன்கள் பலரும் குடும்பத்தை பிரிந்து பொது மக்களுக்காக உழைக்கும் காவலர்களின் சேவையை பாராட்டி பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.
இதன் மறுபுறம், போலீஸாரை பாராட்டுவது மட்டுமல்லாது கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற குரலையும் பலரும் வலுவாக எழுப்பி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சமூக வலைதளம்
1 year ago
சமூக வலைதளம்
1 year ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago