நெட்டிசன் நோட்ஸ்: கமல் பிறந்த தினம் -   நிகரில்லா  கலைஞன்

By செய்திப்பிரிவு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7) தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் வாழ்த்தை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...


கமல் ரசிகன்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நீ பிறந்ததால் இந்நாள் பொன்னாள்


அறுபது வருட கலைப்பயணத்தில் தான் நடித்த மசாலா படங்களும் ரசிக்கும்படி செய்த கமலுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

ஆனந்த்

தமிழ் சினிமாவின் பெருமைமிக்க கலைஞானி கமல் சாருக்கு இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்.....

Thenmozhi Sugumar

துவண்டு போயிருக்கும் பொழுதுகளில் தூக்கி நிறுத்தும் மந்திரம் உங்களிடம் மட்டுமே உள்ளது. அது எப்படினு தெரியணும்னா நீங்க கமல் ரசிகனா இருக்கணும். பிறந்த நாள் வாழ்த்துகள் ஆண்டவரே..

மாறன்

தமிழ் சினிமாவின் தரம் இன்று இவ்வளவு உயர்ந்துள்ளது, தமிழ் சினிமா இன்றளவும் உயிர்ப்புடன் உள்ளது என்றால் அதற்குக் காரணம் நம்மவரே...

உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Madhan Kumar

காதலனாய், நண்பனாய், பிள்ளையாய், சேவகனாய் சினிமாவை நேசித்து உயர்ந்து நின்றாய்! ஆறில் தொடங்கி அறுபது ஆண்டுகளாய் தன்னையும் என்னையும் தூசு தட்டி புதுப்பித்தாய்! உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

RamKumarr

நீ ஒரு காதல் சங்கீதம் ... நாயகன்


எல்லா மொழிகளிலும் நடித்து அத்தனை வெற்றிகளை சிறிய வயதிலேயே பெற்றார். இவர் வாங்காத விருதுகளா கிடைக்காத பட்டங்களா? மக்களுக்குப் புதுமையைக் கொடுத்து படத்திற்குப் படம் நம்மை வியக்க வைக்கும் நம்மவர்.

Manoj Kumar

நடிப்பு கடவுள் கமல் ஹாசனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.!

ரசிகன்

கலைத்தாயின் தமிழ் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்


suzuki surendira

தமிழ் சினிமாவில் தலைசிறந்த நாயகனாகவும், தமிழ் சினிமாவை உலகத்தரத்தில் கொண்டு செல்ல உழைக்கும் சோதனைகளை சாதனைகளாய் மாற்றி மகுடம் சூடும் மகா கலைஞன் பத்மஸ்ரீ கமலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


suja damu

மாபெரும் அறிஞன் ....
நிகரில்லா கலைஞன் ...
காதல் மன்னன் ....
என்றும் நலமுடன் வாழ
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கமல் சார். .

வாழவந்தார்

இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞன் கமல் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

சதிஷ்

நீ பெரும் கலைஞன்..
நிரந்தர இளைஞன்..
ரசனை மிகுந்த ரகசியக் கவிஞன்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமூக வலைதளம்

1 year ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

மேலும்