நெட்டிசன் நோட்ஸ்: 'அசுரன்' - நடிப்பின் அசுரன் தனுஷ்

By செய்திப்பிரிவு

வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படம் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியார் நடிப்பில் இவ்வாரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

Ganesh Nagendran

தேசிய விருது உறுதி... வாழ்த்துகள் அசுரன்.

.™

அசுரன் : உண்மையிலே நடிப்பின் அசுரன் தனுஷ்.


vikey

காடிருந்தா எடுத்திக்கிடுவானுங்க!
ரூபா இருந்தா புடிங்கிடுவானுங்க!
படிப்பை மட்டும் நம்பகிட்டிருந்து எடுத்துக்கவே முடியாது... வெற்றி மாறன்

ATHISHA

அசுரன் - தலித்திய பாட்ஷா!

பேசப்படும் அரசியல் எவ்வளவு தூரம் மக்களுக்குப் புரியும் என்பதில் சந்தேகங்கள் உண்டு. ஆனால், பேசப்பட்டிருக்கிற அரசியல் முக்கியமானது. நடுநெஞ்சில் கத்தியை இறக்கியதுபோல பேசியிருக்கிறார் வெற்றி. அரசியலை விட ஹீரோயிஸம் அதிகம் என்பது படத்திற்கு சற்றே சறுக்கல்தான்.


Gopal Urangapuli

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் படைப்பால் திரைத்துறை வரலாற்றில் திரும்புமுனை படம் அசுரன். எவரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாத சொத்து படிப்புதான் என்ற விதையை விதைத்துள்ளார். இந்தப் படைப்பை, திரையில் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி.

Varun Subramaniam

திருப்பி அடி. ஆனா அதுக்கு முன்னாடி படி. அதிகாரத்தைப் பிடி. ஏன்னா... அதிகாரம் மிக வலிமையானது.

venil ilavarasan

இயல்பான வாழ்வியல் சார்ந்து, வணிக வெற்றிக்கான சூத்திரம் கலந்து, திரைப்படம் செய்வதில் மீண்டும் வெற்றி (மாறன்) கண்டுள்ளார். அன்பும் வீரமும் கொண்ட அசுரன் படைப்பு அருமை..

HariharanVenkatraman

படத்தில் பல இடங்களில் பளிச்சென திரையில் தெரிவது தனுஷின் நடிப்பு மட்டுமல்ல... 'lip sync' ஆகாமல் இருக்கும் வசனங்களும்தான்.

நாட்டுப்புறத்தான்

கல்வியின் மூலம் அதிகாரத்தை அடைவதே, அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளிலிருந்து ஒடுக்கப்பட்ட வர்க்கம் தப்பிக்க ஒரே வழி. அதிகாரத்தை அடைந்ததும் அவன் உனக்கு செய்ததைத் திருப்பி நீ அவனுக்குச் செய்யாதே...

Siva Balan

சில படங்களைக் காணும் அனுபவத்தை விளக்க இயலாது. உணர மட்டுமே முடியும் அவ்வரிசையில் அசுரன். கல்வி இன்றியமையாதது.

KuTTy ;-)

அசுரன் அசத்தல். ஒவ்வொரு தகப்பனின் உணர்வுகள் சரியாகப் பதிவாகியுள்ளன. குடும்பத்தைப் பாதுகாக்க தமது உணர்வுகளை அடக்கி, சிரித்துக்கொண்டே அவமானங்களைத் தங்களுக்குள் புதைக்கும், அன்பை வெளிப்படுத்தும் படம். தமிழ் சினிமாவில் தந்தை அன்பைப் பதியும் ஓரு படம்.

V Note

அசுரன் படமாடா இது... கண்ணு கலங்குது.. கலங்குது..கடைசி வரைக்கும் கலங்குது... அப்பாவோட கஷ்டத்தை இந்த சீன்ல பையன் கலங்க வைக்கிறாங்க பாருங்க #AsuranBlockbuster அதான் கடைசி ரிசல்ட்.

சுரேன்

என்னா நடிப்புடா யப்பா... தனுஷ் வேற லெவல் ஃபெர்பாமன்ஸ்... கேரக்டராவே வாழ்ந்துருக்கான்...#அசுரன் நடிப்பு அரக்கன்..

சித்ரா தேவி

அதே நிலம் நம்ம உரிமை என்பதை சமரசமில்லாமல் சொன்னதற்காகவும் ஒரே மண்ணில பொறந்தோம், ஒரே மொழிய பேசுறோம். இணையறது ஒண்ணும் அவ்வளவு கஷ்டமில்லை என்று முத்தாய்ப்பாய் தனுஷ் சொல்வது முக்கியமான செய்தி. குறைகள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி அசுரன் - அற்புதன்.

சமத்து பையன்

தனுஷ் சிவசாமியாக வாழ்ந்துட்டுப் போயிருக்கார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமூக வலைதளம்

1 year ago

சமூக வலைதளம்

1 year ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

மேலும்