மும்பை மெட்ரோ பணிக்காக வெட்டப்படும் 2,600 மரங்கள்: சமூக வலைதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

மும்பையில் மெட்ரோ பணிகளுக்காக ஆரே காலனியில் உள்ள 2,600 மரங்களை வெட்டக் கூடாது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆரோ காலனியில் உள்ள மரங்களைப் பாதுகாப்பதற்காக பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

வெட்டப்படும் 2,600 மரங்கள்

மும்பையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே காலனி பகுதியில் உள்ள 2,600 மரங்களை வெட்டக்கூடாது என தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களை நேற்று மாலை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் , மரங்கள் அடர்ந்த ஆரே காலனி ஒரு வனப்பகுதி அல்ல எனவும் நீதிமன்றம் கூறியது. இதனை அடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஆரோ காலனியில் நுழைந்த புல்டவுசர்கள் மரங்களை வெட்டும் பணிகளைத் தொடங்கின.

மரங்கள் வெட்டப்படுவதாகத் தகவல் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த ஆரே காலனி மக்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 38 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

மரம் வெட்டும் பணிகள் சனிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் 60 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #AareyForest, #AareyAiKaNa, #SaveAarey போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

ஊர்மிளா, சித்தார்த் மல்ஹோத்ரா, ஸ்வாரா பாஸ்கர் உட்பட பல பாலிவுட் பிரபலங்களும் மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வெட்டப்பட்ட மரங்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் மும்பையின் பல இடங்களில் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமூக வலைதளம்

1 year ago

சமூக வலைதளம்

1 year ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

மேலும்