மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் பலரும் கருணாநிதியின் திட்டங்களையும், சாதனைகளையும் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Kugelberg (கூகல்பர்க்)
முதல் பட்டதாரி என பெருமிதம் கொள்வோம். அதற்கு முழு முதல் காரணமான முதல்வர் கலைஞர் என்பதை
நினைவில் கொள்வோம்.
#ThankYouகலைஞர்
Umabalan Jayabalan
ஆசியாவிலே 2-வது மிகப்பெரிய நூலகமான அண்ணா நூலகத்தை நிறுவியவர் தலைவர் கலைஞர்.
Raaja Srinivaasan
வான்புகழ் தந்த வள்ளுவருக்கு வரலாற்றுச் சிலை எடுத்தவர் தலைவர் கலைஞர்.
Jayashankar
நீர்
இல்லை என்றுணர்ந்த கணம்,
பூமி வறண்டது!
Divya Vishwanath
தமிழகத்தின் 50 வருட எழுத்தாய் நம்பிக்கையாய் இருந்த தலைமைக்கு #ThankYouகலைஞர் என்ற வார்த்தை மட்டும் போதாது.
#கலைஞர் வரலாற்று வழிகாட்டி
Muralidharan
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலையை மாற்றி மத்திய அமைச்சரவையில்
தமிழகத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளி வந்ததோடு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தியவர் கலைஞர் !
Vignesh Anand
கலைஞர் இன்னும் நூறாண்டு வாழ வேண்டும் என்ற பேராசை நிறைவேறாமல் போன நாள் இன்று . தமிழ் உள்ளவரை சுயமரியாதை உள்ள கடைசித் தமிழன் உள்ளவரை கலைஞரின் புகழ் வாழும்! வாழும்! வாழும்! வாழ்க கலைஞர்!!
Muthukumar G
கடலும் அலைகளும் உள்ள வரை கலைஞர் எனும் தலைவர் கலங்கரை விளக்கு போல் தமிழ் எனும் தீபத்தை வீசிக்கொண்டிருப்பார் #ThankYouகலைஞர்
saraboji
மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்றும் உள்ள நிலையில், 1973-லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார் கலைஞர். #ThankYouகலைஞர்
Senthil Srinivasan
எங்கோ ஓர் முதல் பட்டதாரி
எங்கோ ஓர் கலைஞர் காப்பீடு பயனாளி
எங்கோ ஓர் இலவச மின்சார விவசாயி
எங்கோ ஓர் உழவர் சந்தை பயனாளி
எங்கோ ஓர் கைம்பெண்
எங்கோ ஓர் மாற்றுத்திறனாளி
எங்கோ ஓர் திருநங்கை
உன்னை வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்..
RinopaulDass
நூற்றாண்டு உழைப்பின்
ஓராண்டு ஓய்வு .!!
Jayashankar
1. உமது
பேனா முனை
ஏழைகளின் சிகரம்!
2. கை, கால் முளைத்த சூரியன் நீ!
Rajmohan Govind
மரணத்திலும் தனித்துவம் பெற்ற தலைவர் கலைஞர்!!
saraboji
தன் மூளையே தனக்கு டைரி என்பார் கலைஞர். அந்த அளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.
கண்ணன்
கலைஞர் போன்ற சமத்துவ நாயகன் இல்லை என்றால் தமிழகம் சாதி இருளில் சிக்கி பின்னோக்கிச் சென்றிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை #ThankyouKalaignar
முக்கிய செய்திகள்
சமூக வலைதளம்
1 year ago
சமூக வலைதளம்
1 year ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago