செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சங்கீதா சட்டர்ஜி நேற்று திடீரென சிறை வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்றார்.
செம்மர கடத்தல் தொடர்பாக ஆந்திர அதிரடிப் போலீஸார் நடிகை சங்கீதா சட்டர்ஜியை கொல்கொத்தாவில் கைது செய்து, கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனை தொடர்ந்து இவர் தற்போது வரை விசாரணை கைதியாக சிறையில் உள்ளார். இவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி பலரை கைது செய்து வருகின்றனர். இதனிடையே, சங்கீதா சட்டர்ஜி தனக்கு ஜாமீன் வேண்டுமென வலியுறுத்தி பலமுறை சித்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்து விட்டது.
இந்நிலையில், நேற்று சிறைச்சாலையில் உள்ள விஷச் செடியின் காய்களை அரைத்து குடித்து சங்கீதா சட்டர்ஜி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதை அறிந்த சிறை அதிகாரிகள், உடனடியாக அவரை சிகிச்சைக்காக சித்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago