தி
ருச்சி கே.கே.நகர், ஈ.வெ. ரா. சாலையில் மரங்கள் சூழ ரம்மியமாக காட்சியளிக்கிறது ஒரு வீடு. அந்த வீட்டின் அழகிய சுருள் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் தேடல் நூலகத்தை அடையலாம். வசம்பு வாசத்துக்கு நடுவே ரேக்குகளில் வரிசையாக அணிவகுத்திருக்கும் புத்தகங்கள் நம்மை வரவேற்கின்றன.
நூலகத்துக்குள் நுழையும் முன்வாசலில், ‘சிந்திக்கும் நூல்களை சந்திக்கும் களம்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. 10-க்கு 10 அளவுள்ள அறைதான். ஆனால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் கலை சார்ந்த நூல்களை அடக்கி வைத்திருக்கிறது இந்த நூலகம்.
ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர்கள் ச.ஜூலியன், ச.அருணாசலம் அகியோரின் முயற்சியே இப்படி ஒரு நூலகம் அமையக் காரணம்.
இதுகுறித்து ஜூலியன் நம்மிடம் கூறியது: எனக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் வந்த நாளில் இருந்தே நல்ல அரிய புத்தகங்களைத் தேடித் தேடிச் சேகரித்து வந்தேன். கடந்த 20 ஆண்டுகளில் 2,500 புத்தகங்கள் சேர்ந்து விட்டன. என் காலத்துக்குப் பின் என்னவாகும் என்ற கவலை எனக்கு இருந்தது. இதேபோல, பேராசிரியர் அருணாசலமும் தீவிர புத்தக நேசிப்பாளர். அவரிடம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.
மற்றவர்களுக்கு பயன்படும் வகையில், இருந்தால் மட்டுமே புத்தகங்களை பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்தோம். விளைவு, வீட்டின் மாடி நூலகமாக மாறியது. அப்படி உருவானதே, சிந்திக்கும் நூல்களைச் சந்திக்கும் இந்த ‘தேடல்’ நூலகம்” என்றார் ஆர்வம் குறையாமல்.
தேடல் உள்ள யாரும் இங்கு வரலாம் என்கிறார் பேராசிரியர் அருணாசலம். அவர் மேலும் நம்மிடம் கூறும்போது, “மற்றவர்களுக்குப் பயன்படும் விதமாக புத்தகங்களை பலரிடம் கேட்டுப் பெறுகிறோம். இங்கு வருவோருக்கு இந்த நூலகம், வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் முனைவோராக, வாழ்வை நல்ல வழியில் நடத்திச் செல்ல உதவும் அறிவார்ந்த முன் மாதிரி தலைவர்களாக, மனிதர்களாக மாற்றும். அதற்கான தன்னம்பிக்கையை அளிக்கும்” என்கிறார் நம்பிக்கையுடன்.
இவர்களுடன் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவர் இங்கு நூலகராகப் பணிபுரிகிறார். அவருக்கான சம்பளம், மின் கட்டணம், பராமரிப்புச் செலவு ஆகியவற்றை இவர்கள் இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர். தேடல் உள்ள உயிர்களுக்கே பசி இருக்கும் என்றால், இந்த தேடல் நூலகத்துக்குச் சென் றால் வாசிப்பின் ருசி இருக்கும். வாங்க வாசிக்கலாம். அனுமதி இலவசம்தான்.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago