சர்ரியலிச படைப்புகளால் கவரும் ஆட்டோ ஓவியர்

By அ.முன்னடியான்

வியம் என்பது பொது வான பெயர். ஆனால் அவை எவ்வகை இலக் கிய கோட்பாடுகளுக் குள் வருகிறது என்பது முக்கியமானது. ரியலிசம், சர்ரியலிசம், சோசலிச ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் என பலவகை கோட்பாடுகள் உண்டு.

சர்ரியலிசம் என்பது ஐரோப்பாவில் தோன்றிய ஒரு கலை இலக்கிய கோட்பாடு. சர்ரியலிசம் என்ற ஆங்கில வார்த்தை யை 'மிகை எதார்த்தவாதம்’ என தமிழில் மொழிபெயர்க்கலாம். அதாவது தூக்கத்தில் மனதில் இருந்து தோன்றும் கனவுகளைச் சித்தரிக்க முற்படும் கலைப் பரிமாணமாக சர்ரியலிசம் உருவெடுத்தது.

அதாவது கனவு மற்றும் உண்மைத்துவம் கலந்த ஒன்று. யதார்த்தமாக நடைபெறும் ஒரு விஷயத்தில், நம்முடைய சிந்தனைகளை புகுத்துவதுதான் ‘சர்ரியலிசம்’ என்கின்றனர் இலக்கியவியலாளர்கள். “ரியலிசம் என் பது நாம் பழகுவது. இந்தச் சமூ கம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பது. ஒருவருக்கு வணக் கம் சொல்வது போல. ‘சர்ரியலிசம்’ என்பது மனது என்ன நினைக்கிறதோ அது. உதடு வணக்கம் சொன்னாலும் மனதுக்குள் ‘இவன் ஏன் வந்தான்’ என நினைப்பது. இப்படி ஒரு விளக்கத்தை கவிக்கோ அப் துல் ரகுமான் சர்ரியலிசத்துக்கு கொடுத்தார்.

எப்படியோ, ‘சர்ரியலிசம்’ என்பதை உண்மை, உண்மையை தாண்டிய ஒன்று என்று பொருள் கொள்ளலாம். இந்த சர்ரியலிசம் கோட்பாட்டை பின்பற்றி ஓவியங்கள் வரைந்து அசத்துகிறார் புதுச்சேரி கொம்பாக்கத்தைச் சேர்ந்த ஓவியர் திருமலை.

இவர் வரையும் பெரும்பா லான ஓவியங்கள் ஆட்டோவை அடிநாதமாகக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆட்டோ நிற்பது, ஆட்டோவில் பயணிப்பது, ஆட் டோ செல்வது இப்படி படம் வரைவது எதார்த்தம். அதையே ஒரு ஆட்டோ வில் பல அடுக்கு மாடி, ஆட்டோவில் அரங்கு, ஆட்டோவில் அழகிய வீடு, ஆட்டோவுக்குள் அழகிய நந்தவனம் என ஆட்டோவில் தொடங்கி தன் கற்பனைச் சிறகை கலந்து கட்டி சர்ரியலிச படைப்புகளைத் தீட்டுகிறார். ஓவியங்க ளின் மேல் உள்ள பற்றால் தனது வீட்டையே ஓவியக் கூடமாக மாற்றியிருக்கிறார் திருமலை. பள்ளி மாணவர்களுக்கு ‘சர்ரியலிச ஓவியம்’ குறித்த வகுப்புகளும் எடுத்து வருகிறார். இவ ரது ஓவியங்களை பாராட்டி முன் னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து திருமலையிடம் பேசினோம். “5-ம் வகுப்பு படிக்கும் போதே ஓவியம் வரைவதில் ஆர்வம் வந்தது. புதுச் சேரி அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் விளம்பர ஓவியம் படித்தேன். சொந்த கற்பனையில் படங்களை வரையத் தொடங்கினேன். வித்தியாச மான சிந்தனையில் ஓவியங்களைப் வரைய வேண்டும் என்று எண்ணி சர்ரியலிசத்தை அறிந்து அந்த கோட்பாட்டில் ஓவியங்களை வரைய முயற்சித்தேன்.

அதாவது கனவுகளும், உண்மைகளும் கலந்த ஓவியம். இந்த ஓவியத்தின் தந்தை சல்வார்டர் டாலி. அவருடைய ஓவியங்களை பின்பற்றி நானும் இதை வரையத் தொடங்கினேன். 33 ஓவியங்களுடன் முதல் கண்காட்சியை நடத்தினேன். ஆட்டோவுக்கு முக்கியத்து வம் கொடுத்து வரைவதால், என்னை ஆட்டோ ஓவியர் என்று அழைக்கின்றனர். வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் கற்றுக்கொடுத்து வருகிறேன். மாணவர்களின் மனதை ஒருநிலைப் படுத்தி அவர்களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதே என்னுடைய ஆசை. அதற்கு ஓவியக்கலை பெரிதும் கைகொடுக்கும்’’ என்கிறார் திருமலை.

மதஒற்றுமை, சுனாமி பாதிப்பு அன்னை தெரேசா, படிக்கட்டு ஏறி செல்லும்படியான ஆட்டோ ஓவியம் உள்ளிட்ட பல ஓவியங்களால் ரசிகர்களை கவர்ந்தவர்.

எந்த கோட்பாடுகளில் படைப்புகளை உருவாக்கினாலும், கலைகள் யாவும் மக்களுக்கே என்ற அடிநாதம் படைப்பாளர் களுக்கு முக்கியமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்