தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம்

By ஆர்.டி.சிவசங்கர்

நீ

லகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா, நாடுகாணி, கயித்தக்கொல்லி, பந்தலூர் வரையிலான பகுதிகளில் சிலர் மண்ணைத் தோண்டிக் கொண்டே இருக்கின்றனர். இது அவர்களின் அன்றாடப் பணியாக இருக்கிறது. எதற்காக மண்ணை எடுத்துச் செல்கின்றனர் என விசாரித்தால், பெரும்பாலானோர் பதில் கூறுவதில்லை. புதியவர்களை கண்டாலே விலகிச் சென்று விடுகின்றனர். தொடர்ந்து பேச்சு கொடுத்தால், ‘தயங்கியபடி தங்கம் தேடுகிறோம்’ என்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள் சிலர், ‘நாடுகாணி, தேவாலா, பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் இப்பணி யைச் செய்கின்றனர். இதற்காக புதி தாக குழிகள் அமைத்து, சுரங்கப்பாதைகளையும் ஏற்படுத்துகின்றனர். 100 முதல் 300 அடிக்கு கீழ் தங்கப் படிமங் கள் நிறைந்த பாறைகளை உடைத்து, அதை இயங்கு கப்பி மூலமாக மேலே கொண்டு வருகின்றனர். பின்னர், மில்களில் கொடுத்து மாவாக அரைத்து காய வைக்கின்றனர். பின்னர் தண்ணீரில் அலசி, பாதரசம் மூலமாக தங்கத்தைப் பிரித்தெடுக்கின்றனர். உள் ளூர் நகைக் கடைகளில், அன்றைய மார்க்கெட்டை பொறுத்து விற்பனை செய்கின்றனர்.

சுரங்கக் குழிகளில் இறங்கி, உயிரை பணயம் வைக்கும் அபாயகரமான இத்தொழிலில் இரு பாலரும் ஈடுபடுகின்றனர். உள்ளேயே சிக்கி இறந்தால் கூட தெரியாது. வனத்துறையினர் வந்தால், சுரங்கக் குழிகளுக்குள் ஒளிந்து கொள்கின்றனர். சிலர், புதர் காடுகளில் தீ மூட்டிவிட்டு ஓடிவிடுகின்றனர். பந்தலூர் முதல் நாடுகாணி வரை நிலநடுக்கப் பட்டியலில் உள்ள பகுதியில், இங்கு தோண்டப்பட்டுள்ள ஆயிரக்கணக் கான சுரங்கக் குழிகளால் பேரிடர் அபாயமும் உள்ளது.

குழிகள் உள்ள இடங்கள் எல்லாம் புதர் காடுகளாக உள்ளன. இங்கே யானை உள்ளிட்ட வன விலங்குகள் திரிவதும் இயல்பாக உள்ளது. சுரங்கக் குழிகளுக்குள் தங்கம் தேடச் செல்லும் மனிதர்கள், வன விலங்குகளிடம் அகப்பட்டுக்கொள்வதும் நடக்கிறது.

இந்தச் சுரங்கங்கள் இருப்பது சில ஏக்கர் பரப்பில்தான் என்றாலும் நடக் கும் சர்ச்சைகள் அதிகம். மேலும், இதை முன்வைத்து கோடை காலங்களில் பெரும்பாலான காடுகள் தீப் பிடிப்பதும் நடக்கிறது என்கின்றனர்.

இதுதொடர்பாக நீலகிரி ஆவண மைய இயக்குநர் டி.வேணுகோபால் கூறும்போது, ‘ஆங்கிலேயர் காலத்தில், 1831-ல் லண்டனைச் சேர்ந்த ஹூகேனின், மலபார் பகுதியை ஒட்டிய நீலகிரி மாவட்டம் பந்தலூர் கிளன்ராக் பகுதியில் தங்கப் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அதைத்தொடர்ந்து, தேவாலா பகுதியை ஒட்டி 2 சதுர கிமீ சுற்றளவில், ‘ஆல்பா கோல்டு மைனிங்’ நிறுவனத்தினர் சுரங்கப் பாதைகள் அமைத்தனர்.

1879-ல் ‘லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிங்' நிறுவனத்தினர், அப்பகுதியில் சுரங்கம் தோண்டி தங்கம் எடுத்தனர். இதில், வரவைவிட செலவு அதிகம் என்பதால், பணியை நிறுத்திவிட்டு சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்டனர். இருப்பினும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் தங்க மோகம் ஓயவில்லை.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுரங்கங்கள் நோக்கி மக்கள் வருகின்றனர். இப்பணியில் ஈடுபடுபவர்கள் அடிமட்ட கூலித்தொழிலாளர்கள் என்பதால், அரசு அதிகாரிகளும் பெரிதாக கண்டுகொள்வதில்லை’ என்றார்.

எது எப்படியோ, வனமே வாழ்க்கை யாகக் கொண்ட பழங்குடி மக்கள், கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும்போது, அவர் கள் இதுபோன்ற வேலைகளுக்கு துணிகின்றனர். அவர்களின் வாழ்விடங்களை ஒட்டிய வேலைவாய்ப்புகளை யும் மலை வேளாண்மையையும் ஊக்குவிக்க அரசுகள் நடவடிக்கை எடுப் பது காலத்தின் கட்டாயமாக இருக் கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE