தமிழ் தாத்தா முத்துசாமியின் மவுனப் போராட்டம்

By இரா.கார்த்திகேயன்

தி

ருப்பூர் - மங்கலம் சாலை கருவம்பாளையத்தில் வசிக்கும் இயற்கை வாழ்வகம் க.இரா.முத்துசாமிக்கு வயது 80. கடந்த 24-ம் தேதி முதல் யாரிடமும் பேசாமல் மவுனப் போராட்டத்தை தொடங் கியுள்ளார்.

திருமுருகன்பூண்டி அணைப்புதூர் அழகாபுரி நகரில் உள்ள திருமுருகநாதசாமி பனை மரம் முன்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பேச்சை நிறுத்திக் கொண்டார். இந்த மவுனத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து அவரது மனைவி மு.சுப்புலட்சுமியிடம் பேசினோம்.

“எல்லாம் தமிழுக்காகத்தான். இன்றைய தலைமுறையினரிடம் தமிழில் பேசவும் எழுதவும் தடுமாற்றம் உள்ளது. பள்ளிகளில் தமிழ் கல்வி இன்மையே இதற்கு காரணம். வீட்டில் தமிழில் பேசு வது தொடங்கி, எழுதுவது வரை குழந்தைகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களையும் வரலாற்று பதிவுகளையும் பண்பாட்டு ஓவியங்களையும் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழி ஆகும் வரை யாரிடமும் பேசுவதில்லை என உறுதி எடுத்துக் கொண்டு இந்த மவுனப் போராட் டம் தொடர்ந்திருக்கிறார். எஞ்சிய காலம் தமிழுக்குதான் என்றபடி போராட்டத்தை தொடங்கி உள்ளார்” என கூறி முடித்தார் சுப்புலட்சுமி. அவர் கூறியதை நம்மிடம் சைகையில் ஆமோதித்தார் அந்த தமிழ்த் தாத்தா முத்துசாமி.

முத்துசாமி 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். சிறு வயதில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இயற்கை வண்ணங்களைக் கொண்டு பின்னலாடைத் தொழிலுக்கு வண்ணம் ஊட்டும் முயற்சியில் வெற்றி கண்டார். தாய்த் தமிழும் இயற்கை சூழல் பாதுகாப்புமே எதிர்கால சந்ததிகளுக்கு நாம் கொடுக்கும் அழியா சொத்து என்பது இவரது எண்ணமாக இருக்கிறது.

தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி, டெல்லியில் தமிழ் அறிஞர்கள் நடத்திய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் முத்துசாமி பங்கேற்றுள்ளார். ‘தமிழகம் தலைநிமிர தாய்மொழி வழிக் கல்வியே வழிவகுக்கும்’ என மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தார்.

இயற்கைக்கு முரணாக எந்த நவீன வசதிகளையும் இவர் ஏற்பதில்லை. பல ஆண்டுகளாக வீட் டில் மின் இணைப்பு கூட இல் லை. இரவில் சிம்னி விளக்குதான். தற்போது, சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார். சிறுதானிய வகைகள்தான் உணவுக்கு. வீட்டில் புழங்கும் செம்பு பாத்திரங்கள் முதல் பனை ஓலை வரை பல பொருட்களும் இயற்கை சார்ந்ததாகத்தான் இருக்கிறது. மூலி கைத் தோட்டம், நூலகம் என இயற்கை வாழ்வகமாகமே இருக்கிறது முத்துசாமியின் வீடு.

தமிழுக்காக இவர் மேற்கொண்டிருக்கும் இந்த மவுனப் போராட்டம் மிக விரைவில் முடிவுக்கு வரும் நாளை நாமும் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்