இயற்கையை காக்கும் விவசாயம்: ஒரு விவசாயியின் தன்னலமற்ற சேவை

By பெ.பாரதி

ஞ்சில்லா தானியங்களை உற்பத்தியை செய்ய விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக பயிற்சியளித்து வருகிறார் ஓரு விவசாயி.

அதிக மகசூல் பெறவும் குறைந்த நாட்களில் விளைச்சலை பெறவும் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் உணவு நச்சுத்தன்மை ஆவதுடன் கால்நடைகளுக்கான தீவனங்களும் சத்துமிக்கதாக இல்லை.

ஆண்டாண்டு காலமாய் முன்னோர்கள் பின்பற்றிய இயற்கை விவசாயமே எப்போதும் உகந்தது என்பதை உணர்ந்த விவசாயி ஒருவர், தான் இயற்கை விவசாயத்துக்கு மாறியது மட்டுல்ல, கடந்த 10 ஆண்டுகளாக மற்றவர்களையும் ஈர்க்க முயற்சி மேற் கொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தைச் சேர்ந்த வீரமணிதான் அந்த விவசாயி. பழைய எஸ்எஸ்எல்சி படித்தவர். 26 ஆண்டுகள் அபுதாபியில் வேலைக்கு இருந்தவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை விவசாயத்துக் காக சொந்த ஊர் வந்தார்.

தனது வயலில் பயிரிட்டுள்ள முந்திரி மரங்களுக்கு இடையே ஊடு பயிராக உளுந்து, கம்பு, ராகி, பல வகையான மூலிகைச் செடிகள் வளர்த்திருக்கிறார். வரும் கால சந்ததியினரும் இயற்கை விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக இலவசமாக பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். இதற்காக ஒவ்வொரு மாதம் 3-வது வார ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக வகுப்புகளை எடுத்து வருகிறார். குறைந்த செலவில் நிறைந்த பயன்பெறும் வகையில் இயற்கை விவசாயம் செய்வது எப்படி எனச் சொல்லித் தருகிறார்.

இதுகுறித்து வீரமணியிடம் பேசினோம், “ஒரு விவசாயி நஞ்சில்லா தானியத்தை உற்பத்தி செய்து கொடுக்கிறான் என்றால், குறைந்தது 10 பேர் நஞ்சில்லாத உணவை சாப்பிட உதவுகிறான் என்று பொருள். அப்படி 10 விவசாயிகள் கொடுத்தால் 100 பேருக்கு நல்ல உணவு கிடைக்கும். இந்த நினைப்புதான் மனதிருப்தியுடன் இந்த இலவச பயிற்சியை அளிக்கக் காரணம்” என்கிறார் பெருமையுடன்.

குறைந்த செலவில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதற்கான உத்தி, தண்ணீர் பற்றாக்குறை, பூச்சிகளால் நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகியவற்றை கற்றுத் தருகிறார். உணவே மருந்து என திருமூலர் வலியுறுத்திய உணவு கூட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவைதான். இயற்கையை காப்பதும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதும் ஒன்று தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்