அ
வரது பெயர் சுருக்கெழுத்து மணி. இவர் கற்றுக்கொடுத்த சுருக்கெழுத்து பலரின் தலையெழுத்தை மாற்றியிருக்கிறது. ஆமாம். இதுவரை 4,300 பேரை அரசுப்பணிக்கு அனுப்பிவைத்திருக்கிறார். இவரிடம் சுருக்கெழுத்து கற்றவர்கள் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் பணி யில் இருக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ரொம்பவே பின்தங்கிய, மழை மறைவுப் பிரதேசமான சங்கரன்கோவிலை பூர்வீகமாக் கொண்ட மணிக்கு இப்போது வயது 71. வேளாண்மைத் துறையில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர். சும்மா இருக்காமல், தற்போது வரை தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். இவரிடம் சுருக்கெழுத்து கற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் சங்கரன்கோவிலுக்கு வருகிறார்கள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழைகள், தாய், தந்தையர் இல்லாதவர்கள், பெற்றோர்கள் இருந்தும் கவனிக்கப்படாமல் விடப்பட்ட மாணவ, மாணவியருக்கு கட்டணமின்றி பயிற்சி அளிக்கிறார். இவரது மகள் சுருக்கெழுத்தில் மாநில அளவில் சாதனை படைத்தவர்.
மணி கூறும்போது, ``இந்த கலையில் எனக்கு நானே குரு. எனக்குப் பின் இந்தக் கலையை தொடர்ந்து கற்றுத்தருவதற்காக எனது மகனை உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார்.
சுருக்கெழுத்து என்பது எழுத்தல்ல, அது ஒரு கலை என்பதால் அதன் மீது இவருக்கு நாட்டம்.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago