வீடெல்லாம் மணக்கும் ஓணம்: எரி கொள்ளி

 

என்னென்ன தேவை?

புளிப்பான கெட்டித் தயிர் – இரண்டு கப்

சவ் சவ் துண்டுகள் – அரை கப்

உருளைக் கிழங்கு – ஒன்று

உப்பு – சிறிது

தேங்காய் எண்ணெய் – தேவைக்கு

கடுகு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

அரைக்க

காய்ந்த மிளகாய் – எட்டு

உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – கால் கப்

எப்படிச் செய்வது?

காய்கறிகளைச் சதுர துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். தயிரில் தண்ணீர் ஊற்றாமல் கடைந்துகொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்தவற்றை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளுங்கள்.

தயிரில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்குங்கள். அதை அடுப்பில் குறைந்த தணலில் வைத்து, வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கிளறுங்கள். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கிவையுங்கள். இதை சாதத்தில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE