கார பிஸ்கட்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - ஒரு கப்

மைதா- கால் கப்

உப்பு - சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

பச்சை மிளகாய் - 2

பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன்

மல்லித்தழை - அரை கப்

புதினா - 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

கோதுமை, மைதா மாவு இரண்டையும் சலித்து, அதில் நெய் சேர்த்துப் பிசறிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய், மல்லித்தழையோடு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை மாவுடன் சேர்த்துக் கலந்து, மிளகுத் தூள், புதினா, சீரகம் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துகொள்ளுங்கள்.

பிசைந்த மாவை அரை அங்குல கனத்துடன் சப்பாத்தி போல் இட்டு, பிஸ்கட் கட்டர், மூடி போன்றவற்றைப் பயன்படுத்தி, விருப்பமான வடிவங்களில் வெட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்தால் கார பிஸ்கட் தயார்.

படங்கள்: எல். சீனிவாசன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE