சோமாஸ்

என்னென்ன தேவை?

மைதா மாவு - 2 கப்

பொடித்த சர்க்கரை, முழு சர்க்கரை – தலா ஒரு கப்

பொட்டுக்கடலை மாவு - அரை கப்

தேங்காய்த் துருவல் - கால் கப்

நெய் - ஒரு டீஸ்பூன்

ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு



எப்படிச் செய்வது?

மைதா மாவில் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துப் பிசைந்துகொள்ளுங்கள். பூரணம் செய்ய, ஒரு கப் பொடித்த சர்க்கரை, அரை கப் பொட்டுக்கடலை மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள், நெய் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். பிசைந்துவைத்த மைதா மாவைச் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிக் கட்டையில் தேய்த்து உள்ளே பூரணம் வைத்து மடியுங்கள். ஓரங்களில் பிரிந்துவிடாமல் உருட்டி மடியுங்கள். இவற்றைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

ஒரு முழு கப் சர்க்கரையை, ஒரு கப் தண்ணீரில் கரைத்து கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சுங்கள். பொரித்துவைத்திருக்கும் சோமாஸ்களை இந்தப் பாகில் போட்டு எடுத்தால் இனிப்பு சோமாஸ் தயார். அதிக இனிப்பு விரும்பாதவர்கள் சோமாஸைச் சர்க்கரைப் பாகில் போடாமல் அப்படியே சாப்பிடலாம்.

பிரேமா கார்த்திகேயன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE