விடுமுறையில் ஆடிக் களிக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்தக் கடைகளில் நொறுக்குத் தீனி வாங்கித் தருவதைவிட, வீட்டிலேயே விதவிதமான திண்பண்டங்கள் செய்து கொடுக்கலாம். ‘‘பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிற பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியத்துக்கு உகந்தவை அல்ல. வீட்டிலேயே தின்பண்டங்களைச் செய்வதால் செலவு குறைவதுடன் ஆரோக்கியம் என்கிற விலை மதிப்பற்ற பொக்கிஷமும் நமக்குக் கிடைக்கும்’’ என்று சொல்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. சுவையும் சத்தும் நிறைந்த சில தின்பண்டங்களைச் செய்யக் கற்றுத்தருகிறார் இவர்.
என்னென்ன தேவை?
சோள மாவு, பொட்டுக் கடலை மாவு,
அரிசி மாவு தலா கால் கப்
கடலை மாவு ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை ஒரு கப்
இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள் தலா ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மாவு வகைகளுடன் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் வேர்க்கடலையைக் கரைத்துவைத்திருக்கும் மாவில் புரட்டியெடுத்து பொரித்தெடுங்கள். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். நிமிடங்களில் செய்துவிடக்கூடிய நொறுக்கு இது.
ராஜபுஷ்பா
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago