தை மாதத்தில் தரையைத் தொட்ட பனி, மாசி மாதத்தில் மச்சு (வீட்டுக் கூரை) வரை படர்கிறது. “பனி இன்னும் முழுவதுமாக விலகாத நிலையில் பலருக்கும் தொண்டைக்கட்டு, சளித் தொந்தரவு போன்றவை ஏற்படலாம். ஆரோக்கிய உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இதுபோன்ற தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம்” என்கிறார் கும்ப கோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா.
தூதுவளை குழம்பு
என்னென்ன தேவை?
தூதுவளை ஒரு கைப்பிடியளவு
புளி எலுமிச்சையளவு
நெய், நல்லெண்ணெய்,
உப்பு, மஞ்சள் தூள் தேவையான அளவு
கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் 6
கடலைப் பருப்பு,
உளுந்து, துவரம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மல்லி, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்
வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, ஆறவிடுங்கள். தூதுவளையை நெய்யில் வதக்கி இவற்றுடன் சேர்த்து அரையுங்கள். புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள்.
இரும்பு வாணலியில் நல்லணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடுங்கள். அரைத்துவைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்துத் தீயைக் குறைத்து கொதிக்கவிடுங்கள். எண்ணெய் பிரிந்து மேலே வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கிவையுங்கள். சளி, இருமல், ஆஸ்துமா உள்ளவர்கள் இந்தக் குழம்பை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago