சென்னை ஸ்பெஷல்: இறால் வறுவல்

என்னென்ன தேவை?

இறால் - கால் கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

தனி மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை,

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

இறாலை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி உப்பு, தக்காளி சேர்த்து வதக்குங்கள். தக்காளி நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலைப் போட்டு வதக்கி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். லேசாக தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடங்கள் மூடிவையுங்கள். பிறகு மூடியைத் திறந்து நன்றாகக் கிளறிவிட்டு தண்ணீர் வற்றும்வரை வதக்குங்கள். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி வையுங்கள். சூடான சாதத்துடனோ, சப்பாத்தி - பூரி வகை களுடனோ சாப்பிட ஏற்றது இந்த இறால் வறுவல்.



சமையல் குறிப்பு - அம்பிகா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE