பார்லி இட்லி

என்னென்ன தேவை?

குதிரைவாலி அரிசி - ஒரு கப்

அரிசி, பார்லி, உளுந்து - தலா கால் கப்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசி வகைகள், பார்லியைத் தனியாக ஊறவையுங்கள். உளுந்துடன் வெந்தயத்தைச் சேர்த்து ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் உளுந்து, வெந்தயத்தைத் தனியாகவும், அரிசி, பார்லியைத் தனியாகவும் அரைத்து உப்பு சேர்த்துக் கரையுங்கள். கரைத்த மாவை எட்டு மணி நேரம் புளிக்கவிடுங்கள். மறுநாள் காலையில் இட்லிகளாக வார்க்கவும். மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். இதற்குத் தொட்டுக்கொள்ளக் காரச் சட்னி அல்லது தேங்காய்ச் சட்னி பொருத்தமாக இருக்கும். இட்லிப் பொடியும் இதற்கு ஏற்ற இணைதான்.

பச்சரிசி, புழுங்கலரிசி எது வேண்டுமானாலும் சேர்க்கலாம். இரண்டுமே நன்றாகத்தான் இருக்கும். மாவில் கொஞ்சம் நீர்க்கக் கரைத்துத் தோசை வார்த்தால் பேப்பர் ரோஸ்ட் போல அருமையாக இருக்கும்.

குதிரை வாலி அரிசியில் இரும்புச் சத்து, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இது சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.



- பிருந்தா ரமணி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE