மனோகரம்

என்னென்ன தேவை?

அரிசி மாவு - ஒரு கப்

வறுத்து அரைத்த உளுந்து மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

எள் - ஒரு டீஸ்பூன்

வெல்லம் - முக்கால் கப்

நெய் - 2 டீஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள் ஆகியவற்றைப் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவு உப்பு, வெண்ணெய் சேர்த்துக் கலந்து, கொஞ்சம் தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசையுங்கள். பிசைந்த மாவைத் தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியுங்கள். நன்றாக வெந்து மிதந்து வந்ததும் எண்ணெயை வடித்தெடுங்கள்.

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டுக் கரைத்து, பாகு காய்ச்சுங்கள். வெல்லப் பாகைச் சிறிதளவு எடுத்து, தண்ணீரில் விட்டால் உருட்டும் பதம் வரும்போது ஏலக்காய்ப் பொடி கலந்து இறக்கிவிடுங்கள். பொரித்துவைத்திருக்கும் தேன்குழலை உடைத்துப் போட்டு, வெல்லப்பாகை அதில் ஊற்றிக் கலக்குங்கள். கையில் நெய் தடவிக்கொண்டு தேன்குழல் கலவையைக் கூம்பு வடிவில் பிடித்துவையுங்கள். அல்லது பணியாரக் காய் அச்சில் நெய் தடவி அதில் போட்டு அழுத்தி எடுக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE