என்னென்ன தேவை?
மூங்கில் அரிசி 2 கப்
உளுந்து 2 கைப்பிடியளவு
வெந்தயம் 1 கைப்பிடியளவு
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மூங்கில் அரிசியை எட்டு மணி நேரமும், வெந்தயம், உளுந்தைத் தனித்தனியாகவும் ஊறவையுங்கள். தண்ணீரை வடித்து முதலில் வெந்தயத்தையும் பிறகு உளுந்தையும் தண்ணீர் சேர்க்காமல் சிறிது நேரம் அரைத்து பிறகு அதனுடன் மூங்கில் அரிசியைச் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்கவிடுங்கள். புளித்த மாவை ஆப்பச் சட்டியில் ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு, மூடி வேகவிடுங்கள். மூங்கில் அரிசி ஆப்பத்தைத் தேங்காய்ப் பாலுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இனிப்பு சாப்பிடாதவர்கள் வெள்ளரிக்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
இந்த மாவில் வெல்லம், தேங்காய்த் துருவல், எள், ஏலக்காய் சேர்த்து, குழி பணியாரமும் செய்யலாம்.
காய்ந்த மிளகாய், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, தேங்காய் இவற்றைச் சிறிதளவு எண்ணெயில் வதக்கி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். கடுகு, உளுந்து தாளித்துச் சேர்த்தால் வெள்ளரிக்காய் சட்னி தயார்.
மூங்கில் அரிசி அப்பம் சாப்பிட யானை பலம் கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago