ஓமவல்லி நாடா

என்னென்ன தேவை?

கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 1 கப்

அரிசி மாவு - 2 கப்

ஓமம் - 1 டீஸ்பூன்

ஓமவல்லி இலை - 15

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஓமவல்லி இலைகளை நன்றாகக் கழுவி, கூழாக அரைத்துக்கொள்ளுங்கள். கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, ஓமம், மிளகாய்த் தூள் இவற்றை நன்றாகக் கலந்து, வெண்ணெய் சேர்த்துப் பிசையுங்கள். பிறகு ஓமவல்லிக் கூழைச் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையலாம். பிசைந்த மாவை ரிப்பன் நாடா அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள். ஓமம், ஓமவல்லி இரண்டும் சேர்த்திருப்பதால் எண்ணெய் பலகாரமாக இருந்தாலும் எளிதில் ஜீரணமாகிவிடும்.



உஷா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE