# ஜாங்கிரியைச் செய்த பிறகு அதன் மேலே பல வண்ண தேங்காய்த் துருவலைத் தூவினால், பார்க்க வண்ணமயமாக இருப்பதுடன் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
# பாதுஷாவைப் பொரித்தெடுத்ததும் புத்தகம் தைக்கும் ஊசியால் ஐந்தாறு குத்து குத்தி பாகில் போட்டால், உள்ளே பாகு இறங்கி சுவை கூடும்.
# குலோப்ஜாமூன் செய்யும்போது எண்ணெய் அல்லது நெய் லேசாக சூடானால் போதும். உருண்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கலாம். எண்ணெய் அதிகமாகக் காய்ந்தால் போட்டதுமே கருகிவிடும். ஆனால் உள்ளே வேகாமல் அப்படியே இருக்கும்.
# பாதுஷா செய்யும்போது பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்பு வகைகளைப் பொடித்து உள்ளே வைத்து பொரித்தெடுத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
# பாதுஷாவை எண்ணெயில் போட்டதும் வெந்ததும் தானாகவே திரும்பிக்கொள்ளும். மாவு சரியான பதத்தில் இருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம்.
# பகோடாவுக்கு மாவு பிசையும்போது தண்ணீரின் அளவைக் குறைத்துக்கொண்டு டால்டா சேர்த்துப் பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.
# ரவா கேசரி செய்து இறக்கிவைக்கும் முன் இரண்டு டீஸ்பூன் கடலை மாவை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
# தேங்காய் பர்பி செய்யும்போது ஏலக்காயுடன் ஒரு கிராம்பும் சேர்த்துப் பொடித்துச் சேர்த்தால் வாசனை தூக்கலாக இருக்கும்.
# ரவை உருண்டை, பயத்த உருண்டை செய்யும்போது நெய் சூடாக இருக்கும்போதே ஊற்றினால் உருண்டை பிடிக்க நன்றாக வரும்.
- ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago