சுண்டைக்காய் பிட்லை

By ப்ரதிமா

என்னென்ன தேவை?

சுண்டைக்காய் - 2 கப்

துவரம் பருப்பு - கால் கப்

காராமணி - 1 கரண்டி

சாம்பார் பொடி, தனியா, கடலைப் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 2

மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - கால் கப்

கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

எண்ணெய், புளி, உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காராமணியை முதல் நாளே ஊறவைத்து, வேகவைக்கவும். துவரம் பருப்பை வேகவைக்கவும். சுண்டைக்காயை நசுக்கி, வாணலியில் லேசாக எண்ணெய் விட்டு வதக்கவும். ஓரளவு வெந்ததும் புளியைக் கரைத்து அதில் ஊற்றவும். உப்பு, சாம்பார் பொடியைச் சேர்க்கவும். தனியா, தேங்காய், கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடியாக அரைக்கவும்.

வேகவைத்த காராமணி, அரைத்த விழுதைச் சுண்டைக்காயில் கொட்டிக் கொதிக்கவிடவும். வேகவைத்த துவரம் பருப்பு சேர்த்துச் சிறிது கொதித்தவுடன் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE