கத்திரிக்காய் பிட்லை

என்னென்ன தேவை?

கத்திரிக்காய் - 3

குழைய வேகவைத்த பாசிப் பருப்பு - கால் கப்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உளுந்து - 1கப்

பச்சை மிளகாய் - 2

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய்த் துருவல் - கால் கப்

சீரகம் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிதளவு

குழம்பு வடகம் - தாளிக்க

எப்படிச் செய்வது?

உளுத்தம் பருப்பை அரை மணிநேரம் ஊறவைத்து, வடிகட்டி அதனுடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உளுந்து மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டிப் பொரித்தெடுத்துத் தனியே வையுங்கள். அடி கனமான பாத்திரத்தில் 1 கப் நீர்விட்டு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கத்திரிக்காயை அரிந்து சேர்த்து வேகவிடுங்கள்.

கத்திரிக்காய் வெந்ததும், பாசிப் பருப்பைச் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை அரைத்துச் சேருங்கள். ஒரு கொதி வந்ததும் தாளிக்கக் கொடுத்ததைத் தாளித்துச் சேர்த்து, பொரித்த உருண்டைகளைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE