என்னென்ன தேவை?
கோழிக்கறி (தொடைக் கறி) - அரை கிலோ
சின்ன வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பேபி கார்ன் - 100 கிராம்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
தனி மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - சிறிதளவு
பனீர் - 50 கிராம்
மஞ்சள் - கால் டீஸ்பூன்
தேங்காய் விழுது (முந்திரி சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்) - சிறிதளவு
எப்படிச் செய்வது?
கோழிக்கறியைத் தண்ணீர் ஊற்றி மிளகாய்த் தூள், மிளகுத் தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைத் தனித்தனியாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை மற்றும் அரைத்து வைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதுகளைச் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
பிறகு பேபி கார்ன், வேகவைத்த சிக்கன் சேர்த்துக் கிளறுங்கள். பேபி கார்ன் வெந்ததும் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறுங்கள். மசாலா இறுகியதும் தேங்காய்-முந்திரி விழுதை ஊற்றி, பனீரைச் சேருங்கள். கொதித்ததும் இறக்கிவைத்துப் பரிமாறுங்கள்.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago