சாமை முடக்கத்தான் கீரை தோசை

என்னென்ன தேவை?

சாமை அரிசி - 1 கப்

உளுந்து - கால் கப்

வெந்தயம், சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன்

முடக்கத்தான் கீரை - 1 கப்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சாமை அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் சுத்தம் செய்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அவற்றுடன் சீரகம், மிளகு, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி இரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

பிறகு அந்த மாவை சூடான தோசைக் கல்லில் ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE