திருநெல்வேலி சொதி

என்னென்ன தேவை?

தேங்காய் - 1

பாசிப் பருப்பு - 100 கிராம்

பூண்டு - 6 பல்

சாம்பார் வெங்காயம் - 10

எலுமிச்சை பழம் - 1

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 4

முருங்கைக் காய், உருளைக்கிழங்கு, கேரட் - தலா 1

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை குக்கரில் குழைய வேகவையுங்கள். தேங்காயைத் துருவி, துருவலைக் கையால் பிழிந்தால் வரும் கெட்டியான தேங்காய்ப் பாலைத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அந்தத் தேங்காய்த் துருவலுடன் வெந்நீர் கலந்து, மிக்ஸியில் போட்டு அடித்து, இரண்டு மற்றும் மூன்றாம் தேங்காய்ப் பாலைத் தனித் தனியாக எடுத்துவையுங்கள்.

காய்கறிகளை லேசாக எண்ணெயில் வதக்கி, மூன்றாவது முறை எடுத்த தேங்காய்ப் பாலில் போட்டு வேகவையுங்கள். அதில் சிறிதளவு உப்பு போட்டு, காய்கள் வெந்ததும் பச்சை மிளகாயைக் கீறிச் சேருங்கள். பிறகு பாசிப் பருப்பு, இஞ்சியைச் சேர்த்து இரண்டாம் முறை எடுத்த தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

ஒரு கொதி வந்ததும் முதல் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE