கோதுமை பிரதமன் (பாயசம்)

என்னென்ன தேவை?

உடைத்த கோதுமை - 150 கிராம்

நெய் - 50 கிராம்

ஏலக்காய் - 10 கிராம்

தேங்காய் - 2

வெல்லம் - 375 கிராம்

எப்படிச் செய்வது?

உடைத்த கோதுமையை குக்கரில் நன்றாக வேகவைத்து எடுங்கள். தேங்காயைத் துருவி, கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து 100 மி.லி தேங்காய்ப்பால் எடுத்துத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அரைத்த தேங்காயில் மீண்டும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அரைத்து, பால் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்தத் தேங்காய்ப்பாலில் வெல்லம் சேர்த்துக் கொதிக்க விட்டு வடிகட்டுங்கள். வேகவைத்த கோதுமையை இதில் சேர்த்து, மீண்டும் நன்றாகக் கொதிக்கவைத்து, சுண்ட விடுங்கள்.

ஏற்கெனவே எடுத்து வைத்துள்ள 100மி.லி கெட்டித் தேங்காய்ப்பாலை இதில் ஊற்றி, நன்றாகக் கிளறி, கொதிக்க விடுங்கள். நெய், ஏலக்காய்ப் பொடி சேர்த்தால் அருமையான கோதுமை பாயசம் தயார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE