தலைவாழை: வெண்டைக்காய் கிரேவி

தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன்

சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா.

வெண்டைக்காய் கிரேவி

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் - 100 கிராம், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 50 கிராம், பச்சை மிளகாய் - 4, இஞ்சி-பூண்டு பேஸ்ட்- ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 2, மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித் தூள் - அரை டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கெட்டித் தயிர் - 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு

எப்படிச் சமைப்பது?

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சிறிதாக நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதே பாத்திரத்தில் கடுகு, சீரகம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். அதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட், தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும்.

அதில் மிளகாய் பொடி, மல்லிப் பொடி, கரம் மசலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையுடன் வதக்கிய வெண்டைக்காய், தயிர் இரண்டையும் சேர்க்க வேண்டும். இத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் மூடிவைத்து வேகவைக்க வேண்டும். வெந்தவுடன் கிளறிவிட்டு, கொத்தமல்லித் தழையைச் சேர்த்து இறக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE