புதுச்சுவை புத்தாண்டு: தவா சிக்கன்

By செய்திப்பிரிவு

கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப் புதுப்புது உணவு வகைகளுடன் வந்திருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. புத்தாண்டு அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.

தவா சிக்கன்

என்னென்ன தேவை?

நாட்டுக் கோழிக் கறி – அரை கிலோ
வெங்காயம் - 1
இஞ்சி-பூண்டு – 1டீஸ்பூன்
நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள், சீரகத் தூள் - தலா 1டீஸ்பூன்
தயிர் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சுத்தம் செய்த கோழிக்கறியில் வெங்காயம், தயிர், நசுக்கிய இஞ்சி-பூண்டு, மிளகாய்த் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அதை குக்கரில் ஐந்து விசில்வரை வேகவிட்டு எடுங்கள்.

தவாவில் எண்ணெய் விட்டு வேகவைத்த கறிக் கலவையைப் பரப்புங்கள். தண்ணீர் வற்றியதும் மிளகுத் தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தோசை திருப்பியால் இருபுறமும் திருப்பிவிட்டு முறுகலானதும் மல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்