தொகுப்பு: ப்ரதிமா
தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது.
தீபத் திருநாளன்று வீடுகளில் விளக்கேற்றி வைப்பதுடன் பொரி உருண்டை, அப்பம் போன்றவற்றைச் ஜோதி வடிவான இறைவனுக்குப் படைப்பார்கள். எளிமையே உன்னதம் என்ற தத்துவத்தை இந்தப் படையல் உணர்த்தும். தீபத் திருநாள் படையலில் சிலவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி.
பாசிப் பருப்பு லட்டு
என்னென்ன தேவை?
பாசிப் பருப்பு - 2 கப்
பொடித்த சர்க்கரை - 3 கப்
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
நெய் - 3 கப்
எப்படிச் செய்வது?
பாசிப் பருப்பை வெறும் வாணெலியில் போட்டு, கருகாமல் வாசனை வரும்வரை வறுத்தெடுத்து ஆறவிடுங்கள். சூடு குறைந்ததும் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக்கொள்ளுங்கள்.
அகலமான பாத்திரத்தில் பாசிப் பருப்பு மாவு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். உருக்கிய நெய்யை அதில் சிறிது சிறிதாகச் சேர்த்து உருண்டைகளாகப் பிடியுங்கள்.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago