தலைவாழை - எளிமையான கார்த்திகைப் படையல்: இனிப்பு அடை

தொகுப்பு: ப்ரதிமா

தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது.

தீபத் திருநாளன்று வீடுகளில் விளக்கேற்றி வைப்பதுடன் பொரி உருண்டை, அப்பம் போன்றவற்றைச் ஜோதி வடிவான இறைவனுக்குப் படைப்பார்கள். எளிமையே உன்னதம் என்ற தத்துவத்தை இந்தப் படையல் உணர்த்தும். தீபத் திருநாள் படையலில் சிலவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி.

இனிப்பு அடை

என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்
கோதுமை, பாசிப் பருப்பு - தலா 1கப்
உளுந்து - 4 டீஸ்பூன்
அச்சு வெல்லம் - 6
தேங்காய்த் துருவல் - அரை கப்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
நெய் - 6 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு வகைகளைத் தனியாகவும் கோதுமையைத் தனியாகவும் இட்லிக்கு ஊறவைப்பதுபோல் ஊறவைத்துக் கொள் ளுங்கள். நன்றாக ஊறியதும் அவற்றுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிது கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அதில் ஒரு பகுதி மாவில் வெல்லம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள மாவில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் நெய்விட்டு இனிப்பு அடைகளைச் சுட்டெடுங்கள். பிறகு கார அடையை ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு பக்கங்களும் பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE