தலைவாழை: சுவையான சுரைக்காய் பக்கோடா

தொகுப்பு: அன்பு

சுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச் சமைத்து ருசிக்க உதவுகிறார் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதியைச் சேர்ந்த செ. கலைவாணி.

பக்கோடா

என்னென்ன தேவை?

சுரைக்காய்த் துருவல் – அரை கப்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
பொட்டுக்கடலை மாவு, கேழ்வரகு மாவு – தலா கால் கப்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எண்ணெய்யைத் தவிர்த்து மற்ற அனைத் துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது. சுரைக்காயில் இருக்கும் தண்ணீரே போதுமானது. பிசைந்துவைத்துள்ள மாவைச் சூடான
எண்ணெய்யில் உதிர்த்துப் போட்டு நன்றாக வேகவிட்டு எடுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE