தலைவாழை: கமகமக்கும் கோதுமை உணவு - சீடை

தொகுப்பு: ப்ரதிமா

அரிசியில்தான் பலகாரங்களையும் சிற்றுண்டிகளையும் அதிகமாகச் செய்வோம். ஒரு மாறுதலுக்குக் கோதுமையில் அவற்றைச் செய்ய கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன்.

சீடை

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 200 கிராம், வறுத்த ரவை – 1 டீஸ்பூன், அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுந்து மாவு – தலா 1 டீஸ்பூன், வெள்ளை எள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, தேங்காய் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை மாவை வெள்ளைத் துணியில் வைத்து, பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஆவியில் வெந்த கோதுமை மாவுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுந்து மாவு, வெள்ளை எள், தேவை யான அளவு உப்பு, சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தேங்காய் எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE